பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு; கரூரில் அதிகம், சென்னையில் குறைவு

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதமும் பதிவாகியுள்ளது.தமிழகத்தில் நேற்று (ஏப்.,6) 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், 3585 ஆண்கள்; 411 பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர் இருவர் என
TamilnaduElections, Polling, Percentage, Karur, Chennai, தமிழகம், சட்டசபை தேர்தல், சதவீதம், கரூர், சென்னை,

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதமும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று (ஏப்.,6) 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், 3585 ஆண்கள்; 411 பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர் இருவர் என மொத்தம் 3998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கடந்த ஒரு மாதமாக அனைத்து வேட்பாளர்களும் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தனர். நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இரவு 7 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவின் இறுதி நிலவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், அதிகபட்சமாக பாலகோட் தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. மாவட்ட வாரியான நிலவரத்தில், கரூரில் 83.92 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதமும் பதிவாகியுள்ளது.


மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள்:


latest tamil newslatest tamil newslatest tamil news
தொகுதி வாரியாக பதிவான வாக்குகள்:

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஏப்-202112:12:42 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren so what If they working from home ? my son lives in.Chennai also working from home. buy he came to kulithalai to vote.. just say some thing else to shift the divert the blame.
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
07-ஏப்-202119:59:02 IST Report Abuse
Gnanam வாக்குப்பதிவு செய்துவிட்டு வெளியே வரும்போது ஆளுக்கு ஆயிரம் ருபாய் வழங்கப்படும் என்று ஒரு புது சட்டம் கொண்டுவரவேண்டும். விருப்பமில்லாதவர்களும், தேவையில்லாதவர்களும் இந்த பணத்தை தேர்தல் கமிஷனுக்கு திருப்பி கொடுத்துவிடலாம். ஒருமுறை செய்துபாருங்கள், நூறு சதவீதம் வாக்குப்பதிவு நிச்சயம்.
Rate this:
07-ஏப்-202121:18:18 IST Report Abuse
chandran, pudhucherry ஓட்டு போட்டு விட்டு வெளிய வரும் செத்த பாம்பை யார் அடிப்பாங்க...
Rate this:
Cancel
07-ஏப்-202119:10:39 IST Report Abuse
Tapas Vyas உங்க சண்டைக்கே நேரம் பத்தலை,மோடிக்கு மன் கி பாத்துக்கு ரெடி பண்ணணும்,போய்ட்டு வாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X