பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: சாலை மறியல் செய்ய மக்கள் முயற்சி

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதிக்கு உட்பட்ட மத்தூரில், வாக்காளர் பட்டியலில், 70க்கும் மேற்பட்டோரின் பெயர் நீக்கம் செய்துள்ளது, வாக்காளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு மையத்துக்கு சென்று, பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்தபோது, ஒருசிலரின் பெயர்களுக்கு மேல், டெலிட் என்ற முத்திரையும், சிலரது பெயர்கள்,

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதிக்கு உட்பட்ட மத்தூரில், வாக்காளர் பட்டியலில், 70க்கும் மேற்பட்டோரின் பெயர் நீக்கம் செய்துள்ளது, வாக்காளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு மையத்துக்கு சென்று, பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்தபோது, ஒருசிலரின் பெயர்களுக்கு மேல், டெலிட் என்ற முத்திரையும், சிலரது பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமலும் இருந்தது. அனைவரும், வாக்காளர் அட்டை வைத்துள்ளனர். ஆனால், பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது நம் கடமை என, தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், ஓட்டுப்பதிவு செய்ய வந்தபோது, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்டோர், வாக்காளர் அடையாள அட்டையுடன், திருப்பத்தூர் சாலையில், ஓட்டுச்சாவடி முன் சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது, சம்பந்தப்பட்ட பூத் நிலைய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாக்குவாதம் செய்தனர். அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ஓட்டுப்பதிவு மையத்தின் உள்ளே அழைத்து சென்றனர். ஆனால், கடைசி வரை, ஓட்டுப்பதிவு செய்ய முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X