கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்டில் போதிய பஸ் வசதி இல்லாததை கண்டித்து, பயணிகள் பஸ்சை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான அரசு, தனியார் ஊழியர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். நேற்று சட்டசபை தேர்தல் என்பதால், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டளிக்க, பஸ் ஸ்டாண்ட் வந்தனர். வழக்கத்தை விட, கூட்டம் அதிகமாக இருந்ததால், பஸ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக, காலை, 6:00 மணி முதல், திருப்பத்தூர், வேலூர் செல்லும் பஸ்கள் இல்லாததால், பயணிகள் வெறுப்படைந்தனர்.
காலை, 9:00 மணியளவில், பஸ் ஸ்டாண்டில் பஸ் வெளியே செல்லும் பாதையில், பஸ் முன்பு நின்று கோஷம் எழுப்பினர். ஆனால், பஸ் மாற்று வழியில் சென்று வெளியேறியதால், ஆத்திரமடைந்த அவர்கள், பஸ் ஸ்டாண்டின் வெளியே சாலையில் நின்று பஸ்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலின்படி உடனடியாக அங்கு வந்த, கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், எஸ்.ஐ., சிவசந்தர், உள்ளிட்டோர், பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவர்களை, சமாதானப்படுத்தி, மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்படும் என, உறுதியளித்து அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE