பொது செய்தி

தமிழ்நாடு

சுறுசுறுப்பாக நடந்த ஓட்டுப்பதிவு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஓட்டுப்பதிவு சுறுசுறுப்பாக நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில் நேற்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இதற்காக காலையிலேயே ஓட்டளிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, தங்களின் ஓட்டுகளை பதிவு செய்தனர். முன்னதாக ஓட்டளிக்க

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஓட்டுப்பதிவு சுறுசுறுப்பாக நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில் நேற்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இதற்காக காலையிலேயே ஓட்டளிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, தங்களின் ஓட்டுகளை பதிவு செய்தனர். முன்னதாக ஓட்டளிக்க வந்தவர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முகக்கவசம் மற்றும் கையுறை வழங்கி, தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்டு வரிசையில் நிற்க வைத்தனர். ஓட்டளிப்பவர்கள் இடைவெளி விட்டு நிற்பதற்காக வட்டம் வரையப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஓட்டளிக்க வந்தவர்கள் நெருக்கமாகவே நின்று ஓட்டளித்தனர். சில இடங்களில், ஓட்டளிப்பவர்களுக்கு கையுறை வழங்கப்படவில்லை. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 142வது ஓட்டுச்சாவடி மற்றும் பர்கூர் தொகுதி பெருகோபனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 144வது ஓட்டுச்சாவடி மையம் என, சில இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது. இதை அதிகாரிகள் உடனே சரி செய்தனர். தொடர்ந்து அங்கு, ஓட்டுப்பதிவு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X