பொது செய்தி

தமிழ்நாடு

ஏலகிரியில் அமைச்சர் வீரமணிக்கும் தி.மு.க.,வினருக்கும் வாக்குவாதம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
ஜோலார்பேட்டை: ஏலகிரியில், அமைச்சர் வீரமணிக்கும், தி.மு.க.,வினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளு நடந்தது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க.,வில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணியும், தி.மு.க.,வில் தேவராஜூம் போட்டியிடுகின்றனர். நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, ஏலகிரி கிராமத்திலுள்ள, ஓட்டுச்சாவடி மையத்தை பார்வையிட

ஜோலார்பேட்டை: ஏலகிரியில், அமைச்சர் வீரமணிக்கும், தி.மு.க.,வினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளு நடந்தது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க.,வில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணியும், தி.மு.க.,வில் தேவராஜூம் போட்டியிடுகின்றனர். நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, ஏலகிரி கிராமத்திலுள்ள, ஓட்டுச்சாவடி மையத்தை பார்வையிட அமைச்சர் வீரமணி சென்றார். அப்போது, அவருடன் வந்த, அ.தி.மு.க.,வினர் கூட்டமாக, கட்சி துண்டு அணிந்துகொண்டு ஓட்டுச்சாவடி உள்ளே சென்றனர். அவர்களை, தி.மு.க.,வினர் வெளியேற்றினர். இதை, அமைச்சர் வீரமணி கண்டித்தார். இதனால், ஓட்டுச்சாவடிக்கு வெளியே அமைச்சர் வீரமணிக்கும், தி.மு.க.,வினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளு நடந்தது. ஒருவரை, ஒருவர் ஆபாசமாக ??பேசிக்கொண்டனர். இதை, போலீசார் கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்துக்கு பின் அவர்களாகவே கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X