பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் பிரதான கட்சி வேட்பாளர்கள் ஓட்டளிப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
நாமக்கல்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.,- தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயே., கள், தங்கள் ஓட்டுகளை, பதிவு செய்தனர். தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று ஒரே கட்டமாக நடந்தது.நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் தங்கமணி, கோவிந்தம்பாளையம், தி.மு.க., வேட்பாளர் வெங்கடாஜலம், வெடியரசம்பாளையத்தில் தங்கள் ஓட்டுகளை

நாமக்கல்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.,- தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயே., கள், தங்கள் ஓட்டுகளை, பதிவு செய்தனர். தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று ஒரே கட்டமாக நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் தங்கமணி, கோவிந்தம்பாளையம், தி.மு.க., வேட்பாளர் வெங்கடாஜலம், வெடியரசம்பாளையத்தில் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். ராசிபுரம் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் சரோஜா, சங்ககிரி அக்கமாபேட்டை, தி.மு.க., வேட்பாளர் மதிவேந்தன், ராசிபுரம் தேசிய பெண்கள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். சேந்தமங்கலம், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரன், தண்ணிமாத்தியிலும், தி.மு.க., வேட்பாளர் பொன்னுசாமி, கொல்லிமலையிலும், தங்கள் வாக்கை பதிவு செய்தனர். நாமக்கல் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் பாஸ்கர், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கம், புதுச்சத்திரம் ஒன்றியம் நத்தமேட்டிலும் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். ப.வேலூர் அ.தி.மு.க., வேட்பாளர் சேகர், ஒரம்பூரிலும், தி.மு.க., வேட்பாளர் மூர்த்தி, கொத்தமங்கலத்திலும், திருச்செங்கோடு அ.தி.மு.க., வேட்பாளர் பொன் சரஸ்வதி, சீத்தாராம்பாளையத்திலும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் ஈஸ்வரன், சென்னையிலும் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். அதேபோல், அ.ம.மு.க., - தே.மு.தி.க., - ம.நீ.ம., நா.த.க., மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும், தங்கள் தொகுதிக்குட்பட்ட, ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுகளை பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X