பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு இயந்திரத்தால் ஓட்டுப்பதிவு தாமதம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
ராசிபுரம்: ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் மின்னணு ஓட்டு இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்னையால் ஓட்டுப்பதிவு தாமதமானது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று காலை, 7:00 மணிக்கு தொடங்கியது. ராசிபுரம் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வெண்ணந்தூர் ஓன்றியம் புதுப்பாளையத்தில் ஓட்டு இயந்திரத்தை பொருத்துவதில் சிரமம்

ராசிபுரம்: ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் மின்னணு ஓட்டு இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்னையால் ஓட்டுப்பதிவு தாமதமானது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று காலை, 7:00 மணிக்கு தொடங்கியது. ராசிபுரம் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வெண்ணந்தூர் ஓன்றியம் புதுப்பாளையத்தில் ஓட்டு இயந்திரத்தை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், ஒரு மணிநேரம் ஓட்டுப்பதிவு தாமதமானது. பட்டணம் அரசு துவக்கப்பள்ளி சாவடியிலும் சிறிது நேரம் மின்னணு இயந்திரத்தால் ஓட்டுப்பதிவு தடைபட்டது. சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச் சாவடி எண் -2ல் மதியம், 12:00 மணிக்கு இயந்திரம் செயல்படவில்லை. தகவலறிந்த பொறியாளர்கள் நேரில் வந்து சரி செய்தனர். இதனால், ஒரு மணிநேரம் ஓட்டுப்பதிவு தடைபட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மெகராஜ் நேரடியாக சென்று குறிப்பிட்ட ஓட்டுச் சாவடியை பார்வையிட்டார். நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., 12, 13வது வார்டு ஓட்டுச் சாவடிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு சிறிது நேரம் தடைப்பட்டது. பட்டணம் துவக்கப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஓட்டுசாவடி அருகே சில வாலிபர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., பாலமுருகன் மற்றும் ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அதற்குள், தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் தலைமறைவாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X