பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று பாதுகாப்பு உடையணிந்து தேர்தல் பணி

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
ராசிபுரம்: பொன்.கல்பாளையம் பகுதியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் பாதுகாப்புடன் வந்து ஓட்டளித்தார். ராசிபுரம் அடுத்த பொன்குறிச்சியை சேர்ந்தவர், 19 வயது கல்லூரி மாணவர். ஐந்து நாட்களுக்கு முன் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று, அவர் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்ததால், மாலை, 6:00 மணிக்கு மேல் மருத்துவமனை வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். பொன்.

ராசிபுரம்: பொன்.கல்பாளையம் பகுதியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் பாதுகாப்புடன் வந்து ஓட்டளித்தார். ராசிபுரம் அடுத்த பொன்குறிச்சியை சேர்ந்தவர், 19 வயது கல்லூரி மாணவர். ஐந்து நாட்களுக்கு முன் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று, அவர் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்ததால், மாலை, 6:00 மணிக்கு மேல் மருத்துவமனை வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். பொன். கல்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைந்திருந்த ஓட்டுச் சாவடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வந்து ஓட்டளிக்க வந்தார். வாக்காளர்கள் அனைவரும் சென்றவுடன், முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் கொரோனா பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். தொடர்ந்து அந்த வாலிபரின் அடையாள அட்டையை சரிபார்த்த அதிகாரிகள் ஓட்டளிக்க அனுமதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X