பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி மையத்தில் வெப்பநிலை பரிசோதனை

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு தான், ஓட்டுச்சாவடி மையத்தில், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். குமாரபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கு முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. முக கவசம் அணியாமல் வந்த வாக்காளர்களுக்கு முக கவசம் கொடுத்தனர்.

பள்ளிபாளையம்: வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு தான், ஓட்டுச்சாவடி மையத்தில், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். குமாரபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கு முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. முக கவசம் அணியாமல் வந்த வாக்காளர்களுக்கு முக கவசம் கொடுத்தனர். பின்னர் சானிடைசர், கையுறை வழங்கினார். தொடர்ந்து, வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டது. இதற்கு பிறகு ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல மாற்று திறனாளிகள், வயதானவர்கள் செல்ல, நான்கு சக்கர வாகனம் தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதற்காக பணியாளர்களும் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X