தமிழ்நாடு

நாமக்கல் மாவட்டத்தில் 79.73 சதவீதம் ஓட்டுப்பதிவு: 2016ஐ விட குறைவு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
நாமக்கல்: மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவில், 79.73 சதவீதம் பதிவானது. இது, கடந்த, 2016ல் பதிவான ஓட்டுகளை காட்டிலும், சரிந்துள்ளது.தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு தொகுதிகள் உள்ளன. அவற்றில், 2,049

நாமக்கல்: மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவில், 79.73 சதவீதம் பதிவானது. இது, கடந்த, 2016ல் பதிவான ஓட்டுகளை காட்டிலும், சரிந்துள்ளது.
தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு தொகுதிகள் உள்ளன. அவற்றில், 2,049 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர், 1, 2, 3 என, 9,832 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ராசிபுரம் தொகுதியில், இரண்டு லட்சத்து, 36 ஆயிரத்து, 524 பேர், சேந்தமங்கலத்தில், இரண்டு லட்சத்து, 43 ஆயிரத்து, 457, நாமக்கல்லில், இரண்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 771, ப.வேலூர், இரண்டு லட்சத்து, 21 ஆயிரத்து, 602, திருச்செங்கோட்டில், இரண்டு லட்சத்து, 31 ஆயிரத்து, 100, குமாரபாளையத்தில், இரண்டு லட்சத்து, 54 ஆயிரத்து, 439 பேர் என, மொத்தம் 14 லட்சத்து, 44 ஆயிரத்து, 893 பேர் வாக்காளர்கள் உள்ளனர். நேற்று காலை, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு துவங்கியது. அப்போது, நாமக்கல்லில், ஒன்று, திருச்செங்கோட்டில், நான்கு, ப.வேலூரில், ஆறு, சேந்தமங்கலத்தில், மூன்று, குமாரபாளையத்தில், ஒன்று என, மொத்தம், 15 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது. அதன் காரணமாக, ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, சரி செய்த பின், மீண்டும், ஓட்டுப்பதிவு துவங்கியது. அதினால், ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமானது. ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், பல்வேறு பகுதிகளில், மக்கள் ஆர்வத்துடன் வந்து, தங்களது ஓட்டை பதிவு செய்தனர். மேலும், நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். காலை, 9:00 மணி நிலவரப்படி, 14.67 சதவீதம், 11:00 மணிக்கு, 31.51 சதவீதம், மதியம், 1:00 மணிக்கு, 50.84 சதவீதம், மாலை, 3:00 மணிக்கு, 64.78 சதவீதம், ஓட்டுக்கள் பதிவாகின. மேலும், 5:00 மணி நிலவரப்படி, 74.99 சதவீதம், ஓட்டு பதிவானது. இரவு, 7:00 மணிக்கு. ஓட்டுப்பதிவு முடிந்தது. அதையடுத்து, இறுதி ஓட்டுப்பதிவு நிலவரம் (கடைசியாக கிடைத்த தகவல்) பின்வருமாறு:


ராசிபுரம், 82.19, சேந்தமங்கலம், 79.00, நமக்கல், 78.54, ப.வேலூர், 81.13, திருச்செங்கோடு, 78.71, குமாரபாளையம், 78.81 சதவீதம் என, 79.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், நாமக்கல்லில், 2, ராசிபுரத்தில், ஒன்று, ப.வேலூரில், 3 என, மொத்தம், 5 பேர் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். அவர்களுக்கு, பிரத்யேக உடைகள் வழங்கப்பட்டு, பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். 2016ல், ராசிபுரத்தில், 83.49, சேந்தமங்கலத்தில், 81.99, நாமக்கல்லில், 79.32, ப.வேலூரில், 83.18, திருச்செங்கோட்டில், 80.89, குமாரபாளையத்தில், 80.71 என, சராசரியாக, 81.55 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X