சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கம்பம் விழுந்ததில் பஸ் கண்ணாடி உடைப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
எருமப்பட்டி: நாமக்கல்லில் இருந்து அரசு பஸ் ஒன்று பவித்திரத்திற்கு நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. பொன்னேரி கைகாட்டி அருகே, எதிரில் வந்த டேங்கர் லாரியும் பஸ்சும் கடக்க முயன்ற போது சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் ஒயர் மீது டேங்கர் லாரி உரசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அருகே இருந்த மின் கம்பங்கள் இரண்டு தீடீரென உடைந்து பஸ்சின் மீது விழுந்தன.

எருமப்பட்டி: நாமக்கல்லில் இருந்து அரசு பஸ் ஒன்று பவித்திரத்திற்கு நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. பொன்னேரி கைகாட்டி அருகே, எதிரில் வந்த டேங்கர் லாரியும் பஸ்சும் கடக்க முயன்ற போது சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் ஒயர் மீது டேங்கர் லாரி உரசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அருகே இருந்த மின் கம்பங்கள் இரண்டு தீடீரென உடைந்து பஸ்சின் மீது விழுந்தன. இதில் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் பஸ்சை அவசரம் அவசரமாக நிறுத்தி, 30க்கும் மேற்பட்ட பயணிகளை இறக்கி விட்டார். கடந்த, இரு நாட்களுக்கு முன் சூறாவளி காற்றில் இதனருகே இருந்த மின் கம்பம் உடைந்ததால் அதை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று முன் தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணி முழுமையாக முடியாததால் மின் கம்பிகள் தாழ்வாக கட்டப்பட்டிருந்தன. இதனால் லாரி தாழ்வாக இருந்த மின் கம்பியில் மோதியது. இந்த விபத்தில் மின் கம்பிகள் அறுந்ததும், மின்சாரம் தடை பெற்றதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து லாரி ஓட்டுனர் தரப்பிலும் அரசு பஸ் தரப்பிலும் இழப்பீட்டு தொகை வழங்குவதாக ஒப்புக் கொண்டதால் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் சென்றனர். மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று மின் தடையை சரி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X