கரூர்: புதுப்பாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், மின் தடையால் ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட, கவுண்டம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஓட்டுச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த மு. வடநேரே நேரில் ஆய்வு செய்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வழி முறைகள் பின்பற்றப்பட்ட பிறகே, வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா என்றும், மையத்தில் சீராக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறதா என்று பார்வையிட்டார். மேலும் அங்குள்ள, பெண்கள் மட்டுமே பணியாற்றக்கூடிய மாதிரி ஓட்டுச்சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார். இந்நிலையில், கரூர் தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரப்பட்டி அருகே உள்ள, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், மின் தடை ஏற்பட்டது. இதனால், ஓட்டுப்பதிவு தொடங்க தாமதம் ஏற்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து, மின்சாரம் வந்த பின், ஓட்டுப்பதிவு தொடங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE