கரூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா

Added : ஏப் 07, 2021
Share
கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரூர் மாவட்டத்தில், 70 நாட்களுக்கு மேலாக ஒற்றை இலக்கத்தில், தொற்று பதிவாகி வந்தது. ஆனால் நேற்று இரண்டு மடங்கு தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து

கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரூர் மாவட்டத்தில், 70 நாட்களுக்கு மேலாக ஒற்றை இலக்கத்தில், தொற்று பதிவாகி வந்தது. ஆனால் நேற்று இரண்டு மடங்கு தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று, 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றில் இருந்து குணமடைந்த ஏழு பேர், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, மாவட்டத்தில் மொத்தம், 5,735 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 5,584 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 52 பேர் தொற்றால் இறந்துள்ளனர். தற்போது, 99 பேர் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X