பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் கரூர் தொகுதியில் வாக்களிப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கரூர்: அ.தி.மு.க., வேட்பாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், தன் மனைவி விஜயலட்சுமியுடன் வந்து, கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார். இதுபோல, தி.மு.க., வேட்பாளர் செந்தில்பாலாஜி, ராமேஸ்வரப்பட்டி அருகே, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார். நெரூர் ஊராட்சி

கரூர்: அ.தி.மு.க., வேட்பாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், தன் மனைவி விஜயலட்சுமியுடன் வந்து, கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார். இதுபோல, தி.மு.க., வேட்பாளர் செந்தில்பாலாஜி, ராமேஸ்வரப்பட்டி அருகே, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார். நெரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா வாக்களித்தார்.

* கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை காலை, 7:50 மணிக்கு ஊத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஓட்டு போட்டார். பிறகு, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிறந்து வளர்ந்த சொந்த ஊரில், வேட்பாளராக போட்டியிட்டு, ஓட்டுப்போடுவது என்பது பெருமையான விஷயம். அனைவரும் ஓட்டுப்போட்டு, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். சரியான நபர்கள், சட்டசபையில் அமரும் போது, சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மக்கள் மனதில் உள்ள, எழுச்சியை பார்க்கும் போது, அ.தி.மு.க., கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க., வேட்பாளர் இளங்கோ நேற்று காலை, 7:40 மணிக்கு மொஞ்சனூர் அருகே, தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய, தொடக்கப்பள்ளியில் ஓட்டு போட்டார். கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி, அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட, பெரிய திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஓட்டு போட்டார்.

* குளித்தலை தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மாணிக்கம், கடம்பர் கோவில் யூனியன் நடுநிலை பள்ளியில் வாக்களித்தார். அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகரன், நெய்தலூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X