தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளிலும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான, வேட்பு மனுதாக்கல் மார்ச், 12ல் துவங்கி, 19ல் நிறைவு அடைந்தது. மார்ச், 22ல், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில், 40 பேரும், கரூரில், 77 பேரும், கிருஷ்ண ராயபுரத்தில், 26 பேரும், குளித்தலையில், 18 பேரும்

கரூர்: கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளிலும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான, வேட்பு மனுதாக்கல் மார்ச், 12ல் துவங்கி, 19ல் நிறைவு அடைந்தது. மார்ச், 22ல், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில், 40 பேரும், கரூரில், 77 பேரும், கிருஷ்ண ராயபுரத்தில், 26 பேரும், குளித்தலையில், 18 பேரும் போட்டியிட்டனர். ஒரு மாதமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம், ஏப்.,4 இரவு, 7:00 மணியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து நேற்று மாவட்டத்தில், 1,274 ஓட்டுச்சாவடி மையங்களில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. இங்கு, ஆண்கள், பெண்கள், முதல் வாக்காளர்கள், முதியவர்கள் என, பலர் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். கொரோனா பரவலை தடுக்க, ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, பின், கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர், கையுறை வழங்கப்பட்டது. மாவட்டத்தில் நான்கு தொகுதி ஓட்டு எண்ணிக்கை விபரம்: காலை 9.00 மணி: அரவக்குறிச்சியில், 10.61 சதவீதமும், கரூரில், 4.16 சதவீதமும், கிருஷ்ணராயபுரத்தில், 10.25 சதவீதமும், குளித்தையில், 12.25 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது. காலை, 11.00 மணி: அரவக்குறிச்சியில், 31.39சதவீதமும், கரூரில், 29.02 சதவீதமும், கிருஷ்ணராயபுரத்தில், 25 சதவீதமும், குளித்தையில், 26.3 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது. பகல், 1.00 மணி: அரவக்குறிச்சியில், 50.39 சதவீதமும், கரூரில், 47.4 சதவீதமும், கிருஷ்ணராயபுரத்தில், 41.2 சதவீதமும், குளித்தையில், 38.14 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது. பகல், 3.00 மணி: அரவக்குறிச்சியில், 64.9 சதவீதமும், கரூரில், 66.94 சதவீதமும், கிருஷ்ணராயபுரத்தில், 56.9 சதவீதமும், குளித்தையில், 68.68 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது. பகல், 5.00 மணி: அரவக்குறிச்சியில், 77.53 சதவீதம், கரூரில், 79.13 சதவீதம், கிருஷ்ணராயபுரத்தில், 71.1 சதவீதம், குளித்தலையில், 80.58 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது. இரவு, 7.00 மணி: அரவக்குறிச்சியில், 88.8 சதவீதம், கரூரில், 83.5 சதவீதம், கிருஷ்ணராயபுரத்தில், 84.14 சதவீதம், குளித்தலையில், 86.15 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது.மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில, 83.92 சதவீதம் ஓட்டு பதிவு நடந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X