முதல் முறை ஓட்டுப்பதிவு: இளம் வாக்காளர்கள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல் முறை ஓட்டுப்பதிவு: இளம் வாக்காளர்கள் மகிழ்ச்சி

Added : ஏப் 07, 2021
Share
கரூர்: தமிழகத்தில், சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில், முதல் முறையாக இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: மீனா, தண்ணீர்பந்தல்பாளையம்: வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இந்த உரிமையை யாரும் விட்டுக்கொடுக்க கூடாது. எனவே, ஜனநாயக கடமையை நிறைவேற்றும் என்று ஆர்வத்தில் வந்து

கரூர்: தமிழகத்தில், சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில், முதல் முறையாக இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர்.


இது குறித்து அவர்கள் கூறியதாவது: மீனா, தண்ணீர்பந்தல்பாளையம்: வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இந்த உரிமையை யாரும் விட்டுக்கொடுக்க கூடாது. எனவே, ஜனநாயக கடமையை நிறைவேற்றும் என்று ஆர்வத்தில் வந்து ஓட்டளித்து இருக்கிறேன். இந்த நாள் மகிழ்ச்சியாக உள்ளது. சுஷ்மிதா, வி.சி., காலனி: வாக்காளர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல், தங்கள் கையிலுள்ள ஓட்டு என்ற மாபெரும் ஆயுதத்தை கொண்டு, அடுத்த அரசை தேர்வு செய்ய வாக்களிக்க வேண்டும். ஜாதி, மதம், இனம் பாராமல் வாக்களித்து, ஜனநாயக நாட்டை கட்டமைக்க உறுதி ஏற்க வேண்டும். கார்த்திகா, தண்ணீர் பந்தல்பாளையம்: மக்களின் கஷ்டங்களை புரிந்து, நல்லது செய்பவர்கள் அதிகளவில் வெற்றி பெற வேண்டும். எனவே, மக்களுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். படித்தவர்கள் அதிகளவில் அரசியல் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். அப்போது, அரசியல் மாற்றம் ஏற்படுத்த முடியும். சினேகா ஸ்ரீ, ஆண்டாங்கோவில் கிழக்கு: மக்கள் தேவைகளை புரிந்து கொள்ள கூடியவர்கள் இருக்க வேண்டும். ஊழல், லஞ்சம் இல்லாமல் ஆட்சி செய்பவர்களை தேர்வு செய்ய வேண்டும். மாணவ, மாணவியருக்கு பல்வேறு நல திட்டங்களை கொண்டு வரவேண்டும். எங்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோகினி, ஆண்டாங்கோவில்: விவசாய துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். அவர்கள் மீது வன்மத்தில் ஈடுபடுவர்கள் கடுமையாக தண்டிக்க வேண்டும். இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். அவர்களில் கையில், நாடு போனால், நல்ல மாற்ற ஏற்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X