பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,- பா.ஜ., புகார்: 30 நிமிடம் ஓட்டுப்பதிவு நிறுத்தம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று காலை, 7:00 மணிக்கு தொடங்கி, இரவு, 7:00 மணிக்கு நிறைவடைந்தது. தொகுதியில் சில இடங்களில் மட்டும், சிறுசிறு பிரச்னைகள் தவிர, சுமுகமான நிலையில் ஓட்டுப்பதிவு நடந்தது. மேலும், தொகுதியின் பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் மதிய நேரங்களில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் யாரும் ஓட்டளிக்க வராததால், வெறிச்சோடி

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று காலை, 7:00 மணிக்கு தொடங்கி, இரவு, 7:00 மணிக்கு நிறைவடைந்தது. தொகுதியில் சில இடங்களில் மட்டும், சிறுசிறு பிரச்னைகள் தவிர, சுமுகமான நிலையில் ஓட்டுப்பதிவு நடந்தது. மேலும், தொகுதியின் பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் மதிய நேரங்களில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் யாரும் ஓட்டளிக்க வராததால், வெறிச்சோடி காணப்பட்டன. பள்ளப்பட்டியில், ஓட்டுச்சாவடி எண்-213-எம். தெற்கு மந்தை நடுநிலைப்பள்ளியில் சானிடைசர், கையுறை போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, ஒரு சிலரை அதிகாரிகள் சுகாதார பணியாளர்கள் எனக்கூறி அமர வைத்து இருந்தனர். ஆனால் அவர்கள், தி.மு.க.,விற்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் அப்பகுதிக்கு சென்று தேர்தல் அலுவலர்களிடம் புகார் கூறினர். மேலும், ஓட்டுச்சாவடியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் மத்திய பார்வையாளர் ஸ்ரீசந்தன் சான்யா குஹா, தேர்தல் நடத்தும் அலுவலர் தவச்செல்வம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து வைத்து, பிரச்னைக்குரிய நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு, 30 நிமிடங்களுக்கு மேல் ஓட்டுப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X