பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் ஒன்பது பேர் வாக்களிப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒன்பது பேர், வாக்களித்தனர். தமிழகத்தில், கொரோனா பாதிப்பு ஏற்பட்ட வாக்காளர்கள், மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை வாக்களிக்கலாம். இவர்களுக்கு, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதன்படி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட என்.புகளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள

கரூர்: கரூர் மாவட்டத்தில், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒன்பது பேர், வாக்களித்தனர். தமிழகத்தில், கொரோனா பாதிப்பு ஏற்பட்ட வாக்காளர்கள், மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை வாக்களிக்கலாம். இவர்களுக்கு, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதன்படி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட என்.புகளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், இரண்டு கொரோனா நோயாளிகள் வாக்களித்தனர். இவர்கள், ஆம்புலன்ஸ் மூலம், ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டனர். வீட்டில் இருந்தே, அவர்களுக்கு முழு உடற்கவசம் வழங்கப்பட்டு, உரிய பாதுகாப்புடன் ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், முழு உடற்கவசம் உடை அணிந்திருந்தனர். பின்னர் கொரோனா நோயாளிகள், ஓட்டளித்து விட்டு திருப்பினர். மேலும், கரூர் தொகுதியில் ஒருவர், கிருஷ்ணராயபுரத்தில் ஒருவர், அரவக்குறிச்சியில் ஆறு பேர், குளித்தலையில் ஒருவர் என மொத்தம், ஒன்பது கொரோனா நோயாளிகள் வாக்களித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X