பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு நடவு களப்பணியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, நல்லூர் பஞ்., கலிங்கப்பட்டி கிராமத்தில், பெத்தம்மாள் என்ற விவசாயி வயலில் கரும்பு கரணை நடவு நடந்தது. அதில், நாமக்கல் மாவட்டம், தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், தங்களின் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ், ஒரு பகுதியாக கரும்பு கரணை நடவு களப்பணியில் ஈடுபட்டு பயிற்சி பெற்றனர். மேலும், கரும்பில் கரணை நேர்த்தி செய்வதன்

குளித்தலை: குளித்தலை அடுத்த, நல்லூர் பஞ்., கலிங்கப்பட்டி கிராமத்தில், பெத்தம்மாள் என்ற விவசாயி வயலில் கரும்பு கரணை நடவு நடந்தது. அதில், நாமக்கல் மாவட்டம், தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், தங்களின் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ், ஒரு பகுதியாக கரும்பு கரணை நடவு களப்பணியில் ஈடுபட்டு பயிற்சி பெற்றனர். மேலும், கரும்பில் கரணை நேர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும், அதனால் வரும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றியும் விளக்கம் கொடுத்தனர். கரும்புக்கு குளுகோன் அசிடோபாக்டர் எனும் உயிர் உரம் பயன்படுத்தும் முறை மற்றும் டீ.விரிடி மூலம் கரும்பில் கரணை அழுகல் நோய், புல்தண்டு நோயை கட்டுப்படுத்தலாம் எனும் விழிப்புணர்வை விவசாயிகளுக்கு விளக்கினர். கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X