பொது செய்தி

தமிழ்நாடு

பரிசு மழையில் கரூர் தொகுதி: அ.தி.மு.க., - தி.மு.க., டோக்கன் வழங்கல்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் தொகுதியில் பட்டு புடவை, வெள்ளி கொலுசு மட்டுமின்றி டோக்கன் என, அ.தி.மு.க., - தி.மு.க., மாறி மாறி வினியோகம் செய்தனர்.கரூர் தொகுதியில், அ.தி.மு.க.,வில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தி.மு.க.,வில் செந்தில்பாலாஜி போட்டியிடுகின்றனர். திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் அளவில், கரூர் தொகுதியில் நினைத்து பார்க்க முடியாத அளவில் பணப்புழக்கம் காணப்படுகிறது. இங்கு

கரூர்: கரூர் தொகுதியில் பட்டு புடவை, வெள்ளி கொலுசு மட்டுமின்றி டோக்கன் என, அ.தி.மு.க., - தி.மு.க., மாறி மாறி வினியோகம் செய்தனர்.


கரூர் தொகுதியில், அ.தி.மு.க.,வில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தி.மு.க.,வில் செந்தில்பாலாஜி போட்டியிடுகின்றனர். திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் அளவில், கரூர் தொகுதியில் நினைத்து பார்க்க முடியாத அளவில் பணப்புழக்கம் காணப்படுகிறது. இங்கு பலமிக்க வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம், பிரசாரம், நட்சத்திர பேச்சாளர் வந்தால், அங்கு ஆட்களை கூட்டி வர உட்பட என, பல்வேறு வகையில் பணம் விளையாடியது. இங்கு, அ.தி.மு.க.,வினர் ஓட்டுக்கு, 3,000 ரூபாய், தி.மு.க.,வினர், 2,000 ரூபாய் என, பட்டுவாடாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்தனர். இதுமட்டுமின்றி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 5,000 ரூபாய் உதவித்தொகை மற்றும் க்யூ ஆர் கோட் அச்சிடப்பட்ட டோக்கன் வினியோகம் என, சில இடங்களில் மட்டுமே வழங்கப்பட்டது. அ.தி.மு.க.,வினர் குறிப்பிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவோடு, இரவாக பட்டு புடவைகளை வினியோகம் செய்துள்ளனர். மேலும் அனைத்து வீடுகளுக்கும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 73வது பிறந்த நாள் விழா என்று பொறித்த டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின், ஒரு கிராமம் தங்கம், 2,000 ரூபாய் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி, நேற்று முழுவதும் இரண்டு கட்சினர் மாறி, மாறி டோக்கன் வினியோகத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X