சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - தி.மு.க., மோதல்: லேசான தடியடி நடத்திய போலீசார்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கரூர்: கரூரில், அ.தி.மு.க.,வினருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்களை, போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். கரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, ஓட்டுச்சாவடி எண், 70, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிந்தது. அதில், 70 வயது முதியவர் ஒருவர், நேற்று காலை ஓட்டு போட வந்தார். அவரை, அ.தி.மு.க., ஏஜென்ட் ஒருவர், ஓட்டுப்போட அழைத்து செல்ல முயன்றார்.

கரூர்: கரூரில், அ.தி.மு.க.,வினருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்களை, போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். கரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, ஓட்டுச்சாவடி எண், 70, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிந்தது. அதில், 70 வயது முதியவர் ஒருவர், நேற்று காலை ஓட்டு போட வந்தார். அவரை, அ.தி.மு.க., ஏஜென்ட் ஒருவர், ஓட்டுப்போட அழைத்து செல்ல முயன்றார். அப்போது, தி.மு.க.,வினருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு, சமரசம் செய்தனர். அந்த முதியவர் ஓட்டுப்போட்டு சென்ற பிறகு, திருவள்ளுவர் மைதானம் அருகே, அமைக்கப்பட்டிருந்த, தி.மு.க., - அ.தி.மு.க., தேர்தல் அலுவலகத்தில், இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மீது, லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X