பொது செய்தி

தமிழ்நாடு

இரவோடு, இரவாக டோக்கன்; ஓசூரில் ஆர்.கே., நகர் பார்முலா

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் சட்டசபை தொகுதியில், ஆர்.கே., நகர் இடைத்தேர்தல் போல், நேற்று முன்தினம் இரவோடு, இரவாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ், அ.தி.மு.க., வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ணாரெட்டி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், இருவரும், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தனர். குறிப்பாக, தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ்

ஓசூர்: ஓசூர் சட்டசபை தொகுதியில், ஆர்.கே., நகர் இடைத்தேர்தல் போல், நேற்று முன்தினம் இரவோடு, இரவாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ், அ.தி.மு.க., வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ணாரெட்டி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், இருவரும், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தனர். குறிப்பாக, தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ் தரப்பு, ஏரியாவை பொருத்து, 500 முதல், 1,000 ரூபாய் வழங்கியது. அ.தி.மு.க., ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி தரப்பினர், 500 ரூபாய் வழங்கினர். ஆளுங்கட்சியாக இருந்து, 500 தான் தர முடியுமா என, சில இடங்களில் கேள்வி எழுப்பியது. பண வினியோகத்தில், தி.மு.க.,வின் கை ஓங்கியதையறிந்த, அ.தி.மு.க.,வினர், நேற்று முன்தினம் இரவோடு, இரவாக டோக்கன் வினியோகித்தனர். ஓட்டுப்பதிவு முடிந்த பின், பணம் வழங்குவதாக தெரிவித்தனர். ஆர்.கே.நகர் போல், டோக்கன் வழங்கி விட்டு, பணத்தை தராமல் ஏமாற்றி விடுவார்களா என நினைத்து, பொதுமக்கள் ஒரு தரப்பினர் டோக்கனை பெறவில்லை. ஆனால், அ.தி.மு.க.,வினர் வழங்கிய டோக்கன் விவகாரம், தி.மு.க.,வினர் வரை சென்றது. இதற்கு, அவர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, அ.தி.மு.க.,வினர் வழங்கிய ஒவ்வொரு டோக்கனுக்கும், 5,000 ரூபாய் வரை வழங்க வாய்ப்பு உள்ளதாக, நேற்று மதியம் தகவல் பரவியதால், பொதுமக்கள் டோக்கனை பெற, தங்களது பகுதி, அ.தி.மு.க.,வினர் மூலம் முயற்சி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X