பொது செய்தி

தமிழ்நாடு

இறந்துவிட்டதால் பெயர் நீக்கமாம்! அலுவலர்களிடம் முதியவர் வாக்குவாதம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
வாழப்பாடி: ஓட்டுப்போட வந்த முதியவரிடம், இறந்துவிட்டதால் பெயர் நீக்கப்பட்டதாக, தேர்தல் அலுவலர்கள் கூறியதால், வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்.சேலம் மாவட்டம், வாழப்பாடி, பூவனூர் ஊராட்சி, தாதனூரை சேர்ந்த, மேள கலைஞர் வெங்கடாசலம், 58. நேற்று காலை, பூவனூரில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்துக்கு, ஓட்டுப்போட சென்றார். ஆனால், அவர் இறந்துவிட்டதால், வாக்காளர்

வாழப்பாடி: ஓட்டுப்போட வந்த முதியவரிடம், இறந்துவிட்டதால் பெயர் நீக்கப்பட்டதாக, தேர்தல் அலுவலர்கள் கூறியதால், வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்.


சேலம் மாவட்டம், வாழப்பாடி, பூவனூர் ஊராட்சி, தாதனூரை சேர்ந்த, மேள கலைஞர் வெங்கடாசலம், 58. நேற்று காலை, பூவனூரில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்துக்கு, ஓட்டுப்போட சென்றார். ஆனால், அவர் இறந்துவிட்டதால், வாக்காளர் பட்டியலில் இருந்து, பெயர் நீக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் அலுவலர்கள் கூறினர். இதனால், அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம், 'உயிரோடு உள்ள நான், எப்படி இறந்ததாக பட்டியலில் உள்ளது' என கேள்வி கேட்டார். இருப்பினும், ஓட்டுப்போட அலுவலர்கள் அனுமதிக்காததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையறிந்து, அவரது உறவினர்களும், வாக்குவாதம் செய்தனர். பின், பட்டியலில் எப்படி மாறியது என, அதிகாரிகள் விசாரித்தனர். வெங்கடாசலம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இருப்பினும், தற்போது ஓட்டுப்போட முடியாததால், வெங்கடாசலம் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X