பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்போட தொழிலாளர்கள் படையெடுப்பு: 90 சதவீத பஸ்கள் ஓடாததால் பயணியர் தவிப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சேலம்: சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட, போக்குவரத்து தொழிலாளர்கள் சென்றதால், 90 சதவீத பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு, பயணியர் அவதிக்கு ஆளாகினர்.அரசு போக்குவரத்து பஸ்களின் இயக்கம், பராமரிப்பு பணியில், 1.38 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். இவர்கள், அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கம், தி.மு.க., ஆதரவு தொ.மு.ச., கம்யூனிஸ்டுகளின் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி தொழிற்சங்கம் உள்பட, 46க்கும்

சேலம்: சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட, போக்குவரத்து தொழிலாளர்கள் சென்றதால், 90 சதவீத பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு, பயணியர் அவதிக்கு ஆளாகினர்.


அரசு போக்குவரத்து பஸ்களின் இயக்கம், பராமரிப்பு பணியில், 1.38 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். இவர்கள், அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கம், தி.மு.க., ஆதரவு தொ.மு.ச., கம்யூனிஸ்டுகளின் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி தொழிற்சங்கம் உள்பட, 46க்கும் மேற்பட்ட சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். நேற்று, தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ., - பா.ம.க.,வின், பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு விடுப்பு அளிக்க, ஆளுங்கட்சி சார்பில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அவர்கள் விடுப்பு, மாற்று பணி போர்வையில், தேர்தலில் ஓட்டுப்போட மட்டுமின்றி, ஓட்டு சேகரிக்கவும் சென்றனர். தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தொ.மு.ச., காங்.,கின் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., வி.சி., உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு விடுப்பு, அனுமதி மறுக்கப்பட்டும், அவர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், 90 சதவீத பஸ்களின் இயக்கம், நேற்று தடைபட்டது. நேற்று முன்தினமே நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால், சென்னை உள்ளிட்ட தொழில்நகரங்களில் இருந்து, சொந்த ஊர் செல்லும் பயணியர் அவதிக்கு ஆளாகினர். அதேபோல், சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய முக்கிய நகரங்கள் இடையே, நேற்று, 5 சதவீத பஸ்களும், கிராம சேவையில், 5 சதவீத பஸ்கள் மட்டும் இயங்கியதால், பயணியர் பெரும் அவதிப்பட்டனர். தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியதால், அவற்றில் கூட்டம் அலைமோதியது. இதை பயன்படுத்தி, 'ஸ்பேர்' பஸ்களையும், தனியார் பஸ் உரிமையாளர்கள் இயக்கினர். இதனால், பயணியருக்கு சற்று உதவியாக அமைந்தது.

தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மாற்று நடவடிக்கை குறித்து, அதிகாரிகள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதேநேரம், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 20 ஆண்டுக்கு பின் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்ட நிலையில், அவற்றை முழுமையாக அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இதனால், பஸ்களின் இயக்கம் தடைபட்டது. இனியாவது தேர்தலின்போது, போக்குவரத்து தொழிலாளர்கள், தபால் ஓட்டுப்போட, அதிகாரிகள் நடவடிக்கையை எடுத்தால் மட்டும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X