சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரவு காவலாளி கழுத்தறுத்து கொலை: மனைவி உட்பட 15 பேரிடம் விசாரணை

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, இரவு காவலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து, அவரது மனைவி உள்ளிட்ட, 15 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பத்தை சேர்ந்தவர், கோவிந்தராஜ், 50; அங்குள்ள ஓட்டலில், இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கல்யாணி, 45; ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்னையால் ஏழு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே, இரவு காவலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து, அவரது மனைவி உள்ளிட்ட, 15 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பத்தை சேர்ந்தவர், கோவிந்தராஜ், 50; அங்குள்ள ஓட்டலில், இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கல்யாணி, 45; ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்னையால் ஏழு ஆண்டுகளாக, கணவரை விட்டு பிரிந்த கல்யாணி, குழந்தைகளோடு வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியில் வசிக்கிறார். மனைவியை பார்க்க அடிக்கடி சென்று வந்த கோவிந்தராஜ் அங்கேயே தங்கி விட்டார். நேற்று முன்தினம், தன் உறவினர்களுக்கு போன் செய்த கல்யாணி, தன் கணவர் குடிபோதையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். அதனால் உறவினர்கள், அன்று மாலை இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். உறவினர்கள் மாலை போட வந்தபோது, கோவிந்தராஜ் முகம் வெளியே தெரியாதபடி பேக் செய்யப்பட்டிருந்தது. மேலும், உடலை குளிப்பாட்ட வெளியே எடுத்தபோது, அவரது தலை நசுங்கியும், கைகள் பின்பக்கம் கட்டப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதனால், ஆம்பூர் போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். விசாரணையில், கோவிந்தராஜ் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதும், போலீசாருக்கு தெரியாமல் சடலத்தை எரிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவி கல்யாணி உள்ளிட்ட, 15 பேரை போலீசார் பிடித்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X