திருவண்ணாமலை: திருவண்ணாமலை தொகுதியில், பா.ஜ., பூத் ஏஜென்டுகள், பாதியிலேயே ஓட்டுப்பதிவு மையத்திலிருந்து வெளியேறியதால், தி.மு.க.,வினர் குஷியாகி, தங்களுக்கு சாதகமாக ஓட்டு போடுமாறு, ஓட்டுப்பதிவு மையத்திலேயே, வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தனர்.
திருவண்ணாமலை தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் எ.வ.வேலு, பா.ஜ., வேட்பாளர் தணிகைவேலு ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், பா.ஜ., வேட்பாளர், பூத் ஏஜென்ட் பணியை கவனிக்க, கூட்டணி கட்சியினருக்கு, செலவுக்கு பணம் தராததால் விரக்தி அடைந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட, தி.மு.க.,வினர், பா.ஜ., பூத் ஏஜென்டுகளுக்கு, செலவுக்கு பணத்தை கொடுத்து, பகல், 12:00 மணிக்கே, பூத்திலிருந்து வெளியே அனுப்பினர். தொடர்ந்து, தங்களுக்கு இஷ்டம்போல், ஓட்டுப்பதிவு மையத்தில் வாக்காளர்களிடம், தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுமாறு கூறினர். தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளும், தி.மு.க.,வுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். இதேபோன்று, கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட, பா.ம.க., வேட்பாளர் செல்வகுமார், மற்றும் தி.மு.க., வேட்பாளர் பிச்சாண்டி இடையே, நேரடி போட்டி உள்ளது. இந்நிலையில், பா.ம.க.,வுக்கு ஆதரவாக பூத்திலிருந்த, அ.தி.மு.க.,வினர், மதியம் சாப்பாட்டு சென்றவர்கள் மீண்டும் பூத் திரும்பவில்லை. இதனால், தி.மு.க.,வினர் அங்கு, இஷ்டம் போல் செயல்பட்டு, ஓட்டுப்போட வந்தவர்களிடம், தி.மு.க.,வுக்கு ஓட்டுபோட வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE