
தகிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க தற்போது மக்கள் சென்னை மெரினா கடற்கரைக்கு வருகின்றனர்.

தேர்தல் பிரச்சார பரபரப்பு முடிந்து சென்னை நகரம் பூரண அமைதியாக காட்சி தருவதால் மக்கள் வெளியில் செல்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

மீண்டும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக தியேட்டர்,மால் போன்ற ஒரு கூரைக்கு கீழ் உள்ள இடங்களுக்கு செல்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மிகப்பெரிய திறந்த வெளியுடன் காட்சிதரும் மெரினா கடற்கரை மணலில் மாலை நேரத்தில் மகிழ்ச்சியை தேடி குழந்தைகள் குடும்பம் சூழ வருகின்றனர்.

இந்த முறை எப்ரல் முதல் வாரமே உச்சம் தொட்ட வெயிலுக்கு இதமாக இருப்பதும் மாலை நேரத்து கடற்கரை காற்றுதான்.

வருபவர்களில் பலர் கடலில் இறங்கி குளிக்கவும் செய்கின்றனர் கடலில் குளிப்பது ஆபத்து என்று போலீசார் எச்சரிக்கின்றனர் ஆனால் அந்த எச்சரிக்கையையும் மீறி கடலில் குளிக்கத்தான் செய்கின்றனர்.

தங்களுக்கு செலவில்லாமல் சந்தோஷம் தருவதால் ஏழை எளியவர்கள் ஆகா நம்ம மெரினா என்று குதுாகலத்தோடு கூட்டம் கூட்டமாய் வருகின்றனர்.


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE