அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் எங்களுக்கு புதிய தொடக்கம், புதிய அனுபவம்: கமல் அறிக்கை

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் புதிய தொடக்கமாகவும், தங்கள் கட்சியினருக்கு புதிய அனுபவமாகவும் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் 16வது சட்டசபை தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு நிகழ்ந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று
TamilnaduElections, MNM, Kamalhaasan, Election, மக்கள் நீதி மய்யம், கமல், கமல்ஹாசன், தேர்தல், அனுபவம், தொடக்கம்

சென்னை: நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் புதிய தொடக்கமாகவும், தங்கள் கட்சியினருக்கு புதிய அனுபவமாகவும் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் 16வது சட்டசபை தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு நிகழ்ந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் என்ற இக்கட்டான சூழலிலும் 72 சதவீத வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. இனிவரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. இந்த தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


latest tamil news


தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னைப் பொருத்தவரை இந்த தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புதிய அனுபவம். நிறைய அனுபவங்களைக் கற்று முன்னகர்ந்திருக்கிறோம். 'மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை' என்பது அதில் முதன்மையானது. தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக் கனவு. அதை நோக்கிய பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் கம்யூனிஸ்ட்கள் வாறிரு அரசியலை விட அதிக பாதிப்பை தருவார்கள் . இந்த ஐந்து வரும்பொழுதே மாதம் ஆயிரம் என்னும் கஜானா காலியாகும் திட்டத்தை கொண்டு வந்து தமிழன்னாட்டு பட்ஜெட்டில் பெரிய ஓட்டை போட்டு விட்டார்
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
07-ஏப்-202119:22:16 IST Report Abuse
Balasubramanian இப்பொழுது தான் ", களத்தூர் கண்ணம்மா" வில் ஆரம்பித்து இருக்கிறார் இனி முதிர்ச்சி பெற பலகாலம் பிடிக்கும்.
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
07-ஏப்-202119:19:15 IST Report Abuse
திராவிஷ கிருமி பீம் பாய்... பீம் பாய்... ஆ மிஷநரி கொடுத்த ஆறு மில்லியன் டாலரை ஆ லோக்கெரில் வச்சு பூட்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X