புதுடில்லி : கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகி உள்ள நிலையில் நோய் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
கடந்தாண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அதிகம் பரவ தொடங்கிய கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அது படிப்படியாக தளர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு மீண்டும் மார்ச் மாதமே கொரோனாவின் வேகம் தீவிரமானது. தற்போது நாள் ஒன்றுக்கு லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மஹாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் தீவிரமாகி வருகிறது.
![]()
|
தமிழகத்தில் சட்டசபை தேர்தலால் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும் தற்போது நோயின் தாக்கம் அதிகமாகி வருவதால் வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது. இதனிடையே மஹாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கும், வார நாட்களில் ஊரடங்கும், தியேட்டர்களை மூடச்சொல்லியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேப்போன்று குஜராத், டில்லி மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமலாகி வருகிறது.
மேலும் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த தொடங்கி உள்ளன. இதனால் இரவு நேர ஊரடங்கு டுவிட்டரில் #NightCurfew, #Corona ஆகிய ஹேஷ்டாக்குளில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. இரவு நேர ஊரடங்கால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என பலரும் அதற்கு எதிர் கருத்தினையே தெரிவித்து வருகின்றனர். இந்த ஹேஷ்டாக்குளில் பதிவான சிலரின் கருத்துக்கள் இங்கே...
* பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் மோடி, அமித்ஷா பங்கேற்று உரையாற்றுகின்றனர். ஆனால் அந்தக்கூட்டத்தில் பெரும்பாலும் யாரும் மாஸ்க் அணிவதில்லை. அதுப்பற்றி அவர்களும் கூறுவதில்லை. இதைப்பற்றி யாரும் கேட்பதில்லை. ஆனால் இந்த இரவு நேர ஊரடங்கால் எந்த பலனும் இருக்கப்போவதில்லை. மீண்டும் புலம்பெயர்ந்தோர் சாலைகளில் பார்ப்போமோ என அஞ்சுகிறேன்.
* எனக்கு தெரிந்தவரை இரவு நேர ஊரடங்கு கொரோனானை கட்டுப்படுத்த உதவாது. ஏனென்றால் பகலில் பெரும்பாலும் மக்கள் எந்தவித தயக்கமின்றி முகக்கவசம் அணியாமல் கூடுகின்றனர்.
* பெரும்பாலும் இரவில் அனைவரும் படுத்து உறங்க சென்றுவிடுவார்கள். அப்படி இருக்கையில் இரவு நேர ஊரடங்கு விதித்து என்ன பலன் கிடைக்க போகிறது.
![]()
|
* முதலில் சீக்கிரம் சட்டசபை தேர்தலை நடத்தி முடியுங்கள். அதற்கான பிரசார கூட்டங்களில் கூடும் மக்களை தடுத்தாலே கொரோனாவின் வேகம் குறைந்துவிடும்.
* இரவுநேர ஊரடங்கு கொரோனானை கட்டுப்படுத்துமா என தெரியவில்லை. ஆனால் லட்சக்கணக்கான தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள், சின்ன சின்ன ஓட்டல் வைத்திருப்பவர்கள், இரவு நேர மார்க்கெட்டில் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கை நிச்சயம் கேள்விக்குறியாகும்.
* பகலில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல், முகக்கவசம் அணியாமல் அனைவரையும் சுதந்திரமாக கூட்டம் கூட விட்டுவிட்டு, இரவு நேரத்தில் ஊரடங்கு விதிப்பதால் என்ன பயன். பகலில் கொரோனா பரவாதா. மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை குறைத்தாலே கொரோனா பாதிப்பு குறைந்துவிடும்.
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவதோடு, நிறைய மீம்ஸ்களை போட்டோவாகவும், வீடியோகவும் பதிவிட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE