கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: அரியர் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் கல்லூரியில் இறுதி
ArrearExam, TamilnaduGovt, ChennaiHC, Highcourt, அரியர், தேர்வு, ரத்து, ஏற்க முடியாது, ஐகோர்ட், உயர்நீதிமன்றம், சென்னை, தமிழக அரசு

சென்னை: அரியர் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் கல்லூரியில் இறுதி செமஸ்டரை தவிர்த்து மற்ற செமஸ்டரில் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது. மேலும், அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு மாணவர்களிடையே வரவேற்பு இருந்தாலும், கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil news


இந்த வழக்கு இன்று (ஏப்., 07) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'அரியர் தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்,' என கூறினர். மேலும், தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?, தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? என்பதை பல்கலைக்கழகங்கள் வாரியாக தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், வழக்கை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
08-ஏப்-202106:50:41 IST Report Abuse
Elango நீதி துறை நிதி துறை ஆகி பலகாலம் ஆகிவிட்டது.... அடிமைகள் ஆல் பாஸ் என்று பீலா விட்டு மாணவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி போயாச்சு.... தேர்தலுக்கு முன் இந்த தீர்ப்பை ஏன் சொல்லவில்லை ???
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-ஏப்-202106:16:20 IST Report Abuse
D.Ambujavalli அது எப்படிங்க நீதி அரசர்களெல்லாம் கரெக்ட்டாக தேர்தல் முடிந்து, அரியர் மாணவர்களின் ஓட்டுகளெல்லாம் விழுந்த பின் ‘அபிப்பிராயமும் அறிக்கையும் விடுகிறார்கள்?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-ஏப்-202100:06:39 IST Report Abuse
Mani . V தேர்தல் திருவிழா முடிந்து விட்டது. இனி யார் எக்கேடு கெட்டால் என்ன? அரியர் பாஸ் கேன்சல், நகைக்கடன் தள்ளுபடி கேன்சல், ஆறு சிலிண்டர் கேன்சல், அரசு வேலை கேன்சல்,...... நல்லா ஏமாந்தீங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X