மஹா.,வில் கொரோனா அதிகரிக்க புலம்பெயர் தொழிலாளர்களே காரணம்: ராஜ் தாக்கரே

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களே காரணம் என நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (ஏப்.,6) ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
Migrants, Maharashtra, RajThackeray, Covid Spread, ராஜ் தாக்கரே, மஹாராஷ்டிரா, கொரோனா, பரவல், புலம்பெயர் தொழிலாளர்கள்

மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களே காரணம் என நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (ஏப்.,6) ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிர மாநிலத்தில் மட்டும், 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவல் குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். இதில் உத்தவ் தக்கரேவின் சகோதரரும், நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரே கலந்து கொண்டார்.


latest tamil news


ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் ராஜ் தாக்கரே கூறியதாவது: இந்தியாவிலேயே மஹாராஷ்டிரா மாநிலம் தான் அதிகளவில் தொழில்மயமான மாநிலம். இதனால், இங்கு பணியாற்ற வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த மாநிலங்களில் போதுமான அளவுக்கு கொரோனா சோதனை வசதிகள் இல்லை. மஹா.,வில் கொரோனா தொற்று அதிகரிக்க வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
08-ஏப்-202110:33:40 IST Report Abuse
Nellai tamilan குறுகிய மனப்பான்மை. உலகம் ரொம்ப பெரிசு கண்ணா
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஏப்-202108:10:04 IST Report Abuse
தல புராணம் மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கும் அவர்கள் தான் காரணம் சிவசைனிக் ரவுடி அவர்களே.
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
08-ஏப்-202106:55:03 IST Report Abuse
Oru Indiyan ஏன் ஸ்டாலினின் வேலைக்காரன் பிரஷாந்த் கிஷோர் , புலம் பெயர்ந்த தொழிலாளி தானே. என்ன, 350 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய தொழிலாளி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X