மே.வங்கத்தில் 200க்கும் மேல் பா.ஜ., வெற்றி: அமித்ஷா நம்பிக்கை| Dinamalar

மே.வங்கத்தில் 200க்கும் மேல் பா.ஜ., வெற்றி: அமித்ஷா நம்பிக்கை

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (18)
Share
டோம்ஜூர்: மேற்கு வங்கத்தில் மே 2ம் தேதி, 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பா.ஜ., ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேற்குவங்கத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்கிறது. நேற்றுடன் (ஏப்.,6) 3 கட்டத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் அடுத்தக்கட்டமாக ஏப்.,10ல் தேர்தல்
WestBengalElections, Amitshah, BJP, 200Seats, மேற்குவங்கம், அமித்ஷா, பாஜக, ஆட்சி

டோம்ஜூர்: மேற்கு வங்கத்தில் மே 2ம் தேதி, 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பா.ஜ., ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்கிறது. நேற்றுடன் (ஏப்.,6) 3 கட்டத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் அடுத்தக்கட்டமாக ஏப்.,10ல் தேர்தல் நடக்கிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டோம்ஜூரில் வேட்பாளர் ராஜிவ் பானர்ஜியை ஆதரித்து பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:


latest tamil news


நான் ஒரு கிராம பஞ்சாயத்தை மட்டுமே பார்வையிட்டேன், ஆனால் அங்கு மக்களிடம் பார்த்த உற்சாகம், ராஜிவ் பானர்ஜி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன். மே 2ம் தேதி, 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பா.ஜ., ஆட்சி அமைக்கும். மம்தா பானர்ஜியின் விரக்தியை அவரது பேச்சுகளிலும் நடத்தையிலும் காணலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X