பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வருமா முழு ஊரடங்கு? : சுகாதாரத் துறை விளக்கம்

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்.,7) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த
Tamilnadu, Health Ministry, Lockdown, TN, தமிழகம், கொரோனா, பரவல், சுகாதாரத்துறை, ஊரடங்கு, ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்.,7) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


latest tamil news


அப்போது, சுகாதாரத்துறை தரப்பில், 'தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனப் பரவும் செய்தியில் உண்மை இல்லை. தேர்தலுக்குப் பிறகு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவுவது வதந்தியே. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். ஆனால் முழு ஊரடங்கு அறிவிக்கப்படாது. அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,' என விளக்கம் அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
08-ஏப்-202109:23:14 IST Report Abuse
Gokul Krishnan அரசும் தேர்தல் ஆணையமும் தேர்தலை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தள்ளி வைத்து இருக்கவேண்டும் ஏன் மே ரெண்டு எடப்படியோ ஸ்டாலினோ ஜெயித்து தான் தமிழகத்தை காப்பாற்ற முடியுமா
Rate this:
Cancel
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
08-ஏப்-202108:43:07 IST Report Abuse
Chockalingam கொராணா வைரஸ் பரவுவதை தடுக்க முடியாவிட்டாலும், வதந்தி பரவுவதையாவது தடுக்கலாமல்லவா
Rate this:
Cancel
08-ஏப்-202105:52:45 IST Report Abuse
ஆப்பு வராது... ஆனா வரும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X