பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.,7) 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.70 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கைதமிழகத்தில் இன்று (ஏப்.,7) 3,986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால்
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.,7) 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.70 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை


தமிழகத்தில் இன்று (ஏப்.,7) 3,986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,11,110 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 260 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-191) மூலமாக, இன்று மட்டும் 80,535 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 2 கோடியே ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 636 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,391 பேர் ஆண்கள், 1,595 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,49,952 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,61,122 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.


latest tamil news




டிஸ்சார்ஜ்


இன்று மட்டும் 1,824 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரத்து 546 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 9 பேர் தனியார் மருத்துவமனையிலும் 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,821 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 27,743 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு


latest tamil news



latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202118:32:43 IST Report Abuse
ஆரூர் ரங் இம்முறை அரசைக் குறை 😝சொல்லலாம். நோய் பரவால்ல இரண்டாம் அலை சமயத்தில் தேர்தல் எதற்கு? கூட்டம் எதற்கு?🤫 இரண்டு திராவிஷ சனியன்👹 களில் யார் எப்படிப் போனால் என்ன ? இப்போது ஊரடங்கும் வாழ்வாதார பாதிப்பும் இன்னும் கடுமையாக ஆகும். நாங்கள் தடுப்பூசிக்கு சோதனை எலிகளா எனக்கேட்ட கட்சிகளுக்கு இன்னும்😇😇 டுமீல்சுகளின் பேராதரவு இருக்கிறதே
Rate this:
Deva - Cuddalore,இந்தியா
07-ஏப்-202119:39:38 IST Report Abuse
Devaபெட்டி குடுத்து வாங்கிய வங்காளம் மற்றும் புதுச்சேரி சட்டசபை உறுப்பினர்கள் எல்லாம் வேறு பக்கம் சென்று விடுவார்கள் என்பதால் தேர்தலை தள்ளி வைக்கவில்லை....
Rate this:
07-ஏப்-202119:41:42 IST Report Abuse
ஆப்புசொகுசு விமானத்துல வந்து பரப்புனவங்க ஒழுங்காக்கும்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X