தேர்தல் சண்டையில் இளைஞர் படுகொலை| Dinamalar

தேர்தல் சண்டையில் இளைஞர் படுகொலை

Added : ஏப் 07, 2021
Share
கண்ணுார்:கேரளாவில் ஓட்டுப்பதிவுக்கு பின், கள்ள ஓட்டு போடப்படுவதாக பரவிய தகவல் தொடர்பாக நடந்த சண்டையில், ஐ.யு.எம்.எல்., எனப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் கொல்லப்பட்டார்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. சட்டசபைக்கு, நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஓட்டுப் பதிவுக்கு

கண்ணுார்:கேரளாவில் ஓட்டுப்பதிவுக்கு பின், கள்ள ஓட்டு போடப்படுவதாக பரவிய தகவல் தொடர்பாக நடந்த சண்டையில், ஐ.யு.எம்.எல்., எனப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் கொல்லப்பட்டார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. சட்டசபைக்கு, நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஓட்டுப் பதிவுக்கு பின், கண்ணுார் மாவட்டம், சோக்லி பகுதியில், கள்ள ஓட்டுகள் போடப்படுவதாக செய்திகள் பரவின. அது தொடர்பாக, ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி தொண்டர்கள் மற்றும் காங்., தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள, ஐ.யு.எம்.எல்., தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வீசியும், ஆயுதங்களாலும் தாக்கியதில், ஐ.யு.எம்.எல்., இளைஞர் பிரிவை சேர்ந்த மன்சூர், 22, உயிரிழந்தார். இது தொடர்பாக, சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவருடைய குடும்பத்தார் சிலரும் காயமடைந்துள்ளனர். இதேபோல், மாநிலத்தின் பல்வேறு இடங்களில், ஓட்டுப்பதிவுக்கு பின் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X