நக்சல் பிடியில் கமாண்டோ வீரர் மத்தியஸ்தரை நியமிக்க கோரிக்கை

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:சத்தீஸ்கரில், பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே சமீபத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில், கடத்தப்பட்ட கமாண்டோ வீரரின் புகைப்படத்தை, நக்சல்கள் வெளியிட்டனர். சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் பிஜாப்பூர் - சுக்மா எல்லையில், தேடப்பட்டு வரும் நக்சல் மாட்வி ஹிட்மா, தன் கூட்டாளிகளுடன்
 நக்சல் பிடியில் கமாண்டோ வீரர் மத்தியஸ்தரை நியமிக்க கோரிக்கை

புதுடில்லி:சத்தீஸ்கரில், பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே சமீபத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில், கடத்தப்பட்ட கமாண்டோ வீரரின் புகைப்படத்தை, நக்சல்கள் வெளியிட்டனர்.

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் பிஜாப்பூர் - சுக்மா எல்லையில், தேடப்பட்டு வரும் நக்சல் மாட்வி ஹிட்மா, தன் கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, மத்திய ரிசர்வ் போலீசை சேர்ந்த, 'கோப்ரா' எனப்படும் கமாண்டோ படையினர், மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடிப்படை, மாநில போலீசார் உட்பட, பல்வேறு படையினரும் ஒன்றிணைந்து, கடந்த, 3ம் தேதி அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது, இருதரப்புக்கும் நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில், 22 வீரர்கள் உயிரிழந்தனர். 31 பேர் காயம் அடைந்தனர். இந்த சண்டையின் போது, கோப்ரா கமாண்டோ படையை சேர்ந்த வீரர் ராகேஷ்வர் சிங் மின்ஹாஸ் என்பவரை, நக்சல்கள் கடத்தி சென்றனர். இந்நிலையில், அவரது புகைப்படத்தை, நான்கு நாட்களுக்குப் பின், நக்சல்கள் நேற்று வெளியிட்டுள்ளனர்.

அதில், பனைமர ஓலையால் வேயப்பட்ட குடிசைக்குள் அமர்ந்துள்ள வீரர் ராகேஷ்வர், யாருடனோ உரையாடிக் கொண்டிருப்பது தெரிகிறது.'கடத்தப்பட்ட வீரரை திரும்ப அனுப்ப வேண்டுமானால், தங்களுடன் பேச்சு நடத்த, மத்தியஸ்தர்களை அரசு அனுப்ப வேண்டும்' என, நக்சல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கரின் பஸ்டர் மண்டல ஐ.ஜி., சுந்தார்ராஜ், செய்தியாளர்களிடம் கூறிய தாவது:வீரர் ராகேஷ்வர் தங்கள் பிடியில் தான் உள்ளார் என்ற நக்சல்கள் அறிக்கையின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம். அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

சாலை மறியலில் வீரரின் குடும்பம்!

கடத்தப்பட்ட வீரர், ஜம்மு - காஷ்மீரை சேர்ந்தவர். இந்நிலையில், வீரரின் மனைவி மீனு உட்பட, அவரது உறவினர்கள், ஜம்மு - பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.'வீரர் ராகேஷ்வரை விடுவிக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தனது ஐந்து வயது மகள் ஷ்ராக்வியுடன், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கமாண்டோ வீரரின் மனைவி மீனு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:வீரர்கள், தங்கள் விடுமுறை நாட்கள் முடிந்து ஒரு நாள் தாமதமாக பணியில் சேர்ந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இங்கு ஒரு வீரரை கடந்த, 3ம் தேதியில் இருந்து காணவில்லை. அது குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

அவர் நிலை குறித்து அரசோ, சி.ஆர்.பி.எப்., படையினரோ ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஊடகங்களை பார்த்து தான், நாங்கள் தகவல்களை தெரிந்து கொள்கிறோம்.என் கணவரை பத்திரமாக மீட்க வேண்டியது அரசின் பொறுப்பு. நக்சல்களுடன் பேச்சு நடத்தி அவரை மீட்க, உடனடியாக மத்தியஸ்தர்களை அரசு நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
08-ஏப்-202113:34:12 IST Report Abuse
Nallavan Nallavan கிங் பின் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் .. அப்பொழுது தனது சொத்தை நிர்வாகத்தால் இவர்களை வளர்த்துவிட்டார். இவரை மேற்குவங்க மக்கள் விஷம் போல கருதி வெறுக்கிறார்கள் ........ சிவகங்கை வாக்காளர்கள் செய்த தவறு நாட்டுக்கே கேடாக முடிந்தது ..........
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
08-ஏப்-202113:32:28 IST Report Abuse
Nallavan Nallavan கிங் பின் தனது ஆட்சிக்காலத்தில் தனக்கே உரித்தான முட்டாள்தனத்தால் இவர்களை வளர்த்து விட்டார் ....... மேற்கு வங்க மக்கள் இவரை விஷம் போல கருதி வெறுக்கிறார்கள் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X