அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்றும் களத்தில் நிற்போம்: கமல்

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (10+ 35)
Share
Advertisement
சென்னை: 'மண்ணை, மொழியை, மக்களை காக்க, இன்று போல என்றும் களத்தில் நிற்போம்' என, கமல் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் முடிந்த நிலையில், நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட, கோவை ஜி.சி.டி., கல்லுாரியில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தை கமல் பார்வையிட்டார்.மனமார்ந்த
Kamal, Kamal Haasan, TN election 2021, MNM, என்றும், களம், நிற்போம் , கமல்

சென்னை: 'மண்ணை, மொழியை, மக்களை காக்க, இன்று போல என்றும் களத்தில் நிற்போம்' என, கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் முடிந்த நிலையில், நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட, கோவை ஜி.சி.டி., கல்லுாரியில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தை கமல் பார்வையிட்டார்.


மனமார்ந்த நன்றிஅதன்பின், அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தின், 16வது சட்டசபை தேர்தலில், 72 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் இருந்த, இந்த இக்கட்டான சூழலிலும், 72 சதவீத வாக்காளர்கள், தங்கள் கடமையை ஆற்றியிருப்பது, ஜனநாயகத்தின் மீது, மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அரசியலாளர்களின் பொறுப்பை கூட்டுகிறது.

தமிழக மக்களுக்கு, என் மனமார்ந்த பாராட்டுகள். 100 சதவீத பங்கேற்பே ஜனநாயகம் சென்று சேர வேண்டிய இடம். இனிவரும் தேர்தல்களில், நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான், ஒரு ஜனநாயக நம்பிக்கைவாதியாக என் ஆசை.

இந்தத் தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட, ம.நீ.ம., உறுப்பினர்கள், தோழமை கட்சிகளின் உறுப்பினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், சக போட்டியாளர்கள். மேலும், வாக்காளர்கள், தேர்தல் கமிஷன், ஊடக வியலாளர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றி.


கூட்டுக் கனவுதேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னைப் பொறுத்த வரை, இந்தத் தேர்தல் ஒரு புதிய துவக்கம். என் கட்சியினருக்கும், இது புதிய அனுபவம். நிறைய அனுபவங்களை கற்று முன்னேறி உள்ளோம். 'மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை' என்பது, அதில் முதன்மையானது. தமிழகத்தை சீரமைப்போம் என்பது, வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக் கனவு. அதை நோக்கிய பாதையிலும், பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களை காக்க, இன்று போல என்றும் களத்தில் நிற்போம். இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10+ 35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
08-ஏப்-202118:56:35 IST Report Abuse
vbs manian கழகத்தை போல் பேச்சு. மண் மொழி மக்கள் சிதிலம் ஆனது இந்த திராவிட ஆட்சிகள் வந்த பின்தான் அரங்கேறின.
Rate this:
Cancel
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
08-ஏப்-202116:21:57 IST Report Abuse
rajan_subramanian manian சோண முத்தா போச்சா?
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
08-ஏப்-202112:39:14 IST Report Abuse
Sridhar எதோ பிரியா விடை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X