சட்டசபை தேர்தலால் 5 கோடி யூனிட்கள் சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தலால் 5 கோடி யூனிட்கள் சரிவு

Added : ஏப் 07, 2021
Share
சென்னை:சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவிற்காக, பொது விடுமுறை விடப்பட்டதால், ஒரே நாளில் மின் நுகர்வு, 5 கோடி யூனிட்கள் சரிந்தது. தமிழகத்தில், ஒரு நாள் முழுதும், அதாவது,24 மணி நேரமும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது.தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, சட்ட சபை தேர்தல் பிரசாரம், கோடை வெயில் சுட்டெரிப்பது உள்ளிட்ட காரணங்களால்,

சென்னை:சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவிற்காக, பொது விடுமுறை விடப்பட்டதால், ஒரே நாளில் மின் நுகர்வு, 5 கோடி யூனிட்கள் சரிந்தது.

தமிழகத்தில், ஒரு நாள் முழுதும், அதாவது,24 மணி நேரமும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது.தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, சட்ட சபை தேர்தல் பிரசாரம், கோடை வெயில் சுட்டெரிப்பது உள்ளிட்ட காரணங்களால், தற்போது, 36 கோடி யூனிட்களை தாண்டியுள்ளது.

இம்மாதம், 1ம் தேதி, 36.58 கோடி யூனிட்கள்; 2ல், 36.73 கோடி; 3ல், 36.74 கோடி; 4ல், 35.20 கோடி யூனிட்களாக இருந்தது. சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவிற்கு முந்தைய நாளான, 5ம் தேதி, 36.40 கோடி யூனிட்களாக இருந்தது. தேர்தல் நாளான, 6ம் தேதி, வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக, அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவித்தன.

இதனால், மின் பயன்பாடு குறைந்தது. இதையடுத்து, அன்று ஒரே நாளில் மட்டும், மின் நுகர்வு, 5.16 கோடி யூனிட்கள் குறைந்து, 31.24 கோடி யூனிட்களாக சரிந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X