பொது செய்தி

இந்தியா

'யப்' டிவி பயனாளர்களே... : ஐபிஎல்., 2021 காண ரெடியா!

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான 'யப்' டிவி, ஐபிஎல் 2021போட்டிகளை நேரலையில் வழங்குவதற்கான உரிமையை பெற்றுள்ளது. உலகில் எவ்வளவோ நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் இந்தியாவிலும் நடக்கும் ஐபிஎல்., போட்டிகள் என்று சொல்லுவதை விட திருவிழாவாகத்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். கடந்தாண்டு கொரோனா பிரச்னையால் ஐபிஎல்., போட்டிகள் துபாயில் நடந்தது. அப்போதே இதன்
YuppTV, IPL2021,

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான 'யப்' டிவி, ஐபிஎல் 2021போட்டிகளை நேரலையில் வழங்குவதற்கான உரிமையை பெற்றுள்ளது.

உலகில் எவ்வளவோ நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் இந்தியாவிலும் நடக்கும் ஐபிஎல்., போட்டிகள் என்று சொல்லுவதை விட திருவிழாவாகத்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். கடந்தாண்டு கொரோனா பிரச்னையால் ஐபிஎல்., போட்டிகள் துபாயில் நடந்தது. அப்போதே இதன் உரிமைத்தை பெற்று நேரலையில் வழங்கிய யப் டிவி, இந்தமுறையும் ஐபிஎல் போட்டிகளை நேரலையில் வழங்க உள்ளது.

இந்தாண்டு ஐபிஎல்., திருவிழா இந்தியாவிலேயே நடக்கிறது. ஏப்., 9ம் தேதி துவங்கும் இந்த போட்டிகள் ஏப்., 30வரை சென்னை, மும்பை, பெங்களூரு, டில்லி, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிகளை காண இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர். இந்நிலையில் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஓடிடியான யப் டிவியில் இம்முறையும் ஐபிஎல்., போட்டிகள் ஒளிபரப்பாகின்றன.

மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் திருவிழாவை ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா (சிங்கப்பூர் மற்றும் மலேசியா தவிர), மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மத்திய ஆசியா, நேபாளம், பூட்டான் மாலத்தீவு உள்ளிட்ட 100 நாடுகளில் வழங்க உள்ளது யப் டிவி. கொரோனா காலக்கட்டத்தில் நேரடியாக சென்று போட்டியை காண முடியாதவர்கள் ஹெச்டி தரத்தில் வீட்டில் இருந்தபடியே இந்த ஐபிஎல்., திருவிழா கொண்டாட்டத்தை கண்டு மகிழலாம்.

‛‛கிரிக்கெட்டிற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். அதிலும் ஐபிஎல்., போட்டிகளுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2021 ஐபிஎல்., போட்டிகள் இந்த முறை இந்தியாவில் நடக்கிறது. யப் டிவி பயனாளர்கள் தங்களின் விருப்பமான இந்த விளையாட்டு நிகழ்வை தங்கள் வீடுகளில் இருந்தபடியே அனுபவிக்க முடியும்'' என்கிறார் யப் டிவியின் சிஇஓ., உதய் ரெட்டி.

அப்புறம் என்ன 'யப்' டிவி பயனாளர்களே... ஐபிஎல்., 2021 காண ரெடி தானே!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X