உள்நாட்டு விமான சேவை 2030ல் இரு மடங்கு உயரும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உள்நாட்டு விமான சேவை 2030ல் இரு மடங்கு உயரும்

Added : ஏப் 07, 2021
Share
புதுடில்லி:'இந்தியாவில், வரும், 2030ல், உள்நாட்டு விமான சேவை, இரு மடங்கு அதிகரிக்கும்' என, 'போயிங்' நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம், விமானங்களை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் மண்டல நிர்வாக இயக்குனர், டேவிட் ஷுல்டே, டில்லியில், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனாவால், 2020ல், உள்நாட்டு விமான சேவை, 55 சதவீதம் சரிவடைந்தது. ஆனால், அடுத்த, 10 ஆண்டுகளில்,

புதுடில்லி:'இந்தியாவில், வரும், 2030ல், உள்நாட்டு விமான சேவை, இரு மடங்கு அதிகரிக்கும்' என, 'போயிங்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம், விமானங்களை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் மண்டல நிர்வாக இயக்குனர், டேவிட் ஷுல்டே, டில்லியில், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனாவால், 2020ல், உள்நாட்டு விமான சேவை, 55 சதவீதம் சரிவடைந்தது. ஆனால், அடுத்த, 10 ஆண்டுகளில், 2019ல் காணப்பட்டதை போல, விமான சேவை, இரு மடங்கு அதிகரிக்கும். இதற்கு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும், அதிகரித்து வரும் நடுத்தர வருவாய் பிரிவினரும் துணை புரிவர்.

அடுத்த, 20 ஆண்டுகளில், 2,200 புதிய விமானங்கள் தேவைப்படும். புதிய விமானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள், விமான பணியாளர்கள் உட்பட, 90 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சரக்கு விமான போக்குவரத்து பிரிவு, ஆண்டுக்கு, சராசரியாக, 6.3 சதவீத வளர்ச்சி காணும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X