தேர்தல் விதிமீறல்: மம்தாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்:| Dinamalar

தேர்தல் விதிமீறல்: மம்தாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்:

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (9)
Share
புதுடில்லி :தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, தேர்தல் ஆணையம் நேற்று, 'நோட்டீஸ்' அனுப்பியது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதற்கிடையே, தேர்தல் பிரசாரங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள்
 Mamata Banerjee, Explain "United Muslim" Appeal: Election Commission

புதுடில்லி :தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, தேர்தல் ஆணையம் நேற்று, 'நோட்டீஸ்' அனுப்பியது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதற்கிடையே, தேர்தல் பிரசாரங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news



கடந்த, 3ம் தேதி பிரசாரம் செய்த மம்தா பானர்ஜி, 'முஸ்லிம் வாக்காளர்கள், வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஓட்டளித்து, தங்கள் ஓட்டுகளை பிரிக்காமல், திரிணமுல் காங்., கட்சிக்கு அனைவரும் ஓட்டளிக்கவேண்டும்' என, பேசி உள்ளார். இதையடுத்து, மம்தாவுக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம், பா.ஜ., தரப்பினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி அவ்வாறு பேசிய மம்தாவுக்கு, அடுத்த, 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கக்கோரி, தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X