குன்னுார்:கோடை சீசனில் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 2,200 மலர் தொட்டிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில், கோடை சீசனுக்காக, 30க்கும் மேற்பட்ட வகைகளில், 175 ரகங்களில், மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும், 2,200 தொட்டிகளில், மலர் நாற்றுகள் தயார் செய்யப்பட்டன. அதில், பிரிமுலா, கேலன்ச்சோ, போயின் சேட்டியா, பெகோனியா உள்ளிட்ட, 12 வகை மலர் செடிகள் பூத்துஉள்ளன.
அலங்கார இலை செடிகள், 30 வகைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. தற்போதே மலர்கள் பூத்துள்ளதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தொட்டிகளில் பராமரிக்கப் படும், 70 வகை மலர் செடிகள், தலா, 60 முதல், 170 ரூபாய் வரை சுற்றுலா பயணியருக்கு விற்பனை செய்யப்படுகிறது. சமவெளி பகுதிகளில், இந்த செடிகளை வளர்க்க தேவையான விதைகளும், தோட்டக்கலை சார்பில் விற்பனை செய்யப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE