சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பலன் கிடைக்குமா?

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
பலன் கிடைக்குமா?'பிரதமர் நரேந்திர மோடியுடன், என்னை ஒப்பிடலாமா... இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என தெரியவில்லையே' என, முணுமுணுக்கிறார், குஜராத் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான விஜய் ரூபானி. மோடி பிரதமரானதும், குஜராத் முதல்வர் பதவியில், ஆனந்தி பென் படேல் நியமிக்கப்பட்டார். அவரது பணி திருப்தி அளிக்காததால், அவருக்கு பதிலாக, விஜய் ரூபானிக்கு முதல்வர் பதவி

அக்கம் பக்கம்


பலன் கிடைக்குமா?



'பிரதமர் நரேந்திர மோடியுடன், என்னை ஒப்பிடலாமா... இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என தெரியவில்லையே' என, முணுமுணுக்கிறார், குஜராத் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான விஜய் ரூபானி. மோடி பிரதமரானதும், குஜராத் முதல்வர் பதவியில், ஆனந்தி பென் படேல் நியமிக்கப்பட்டார். அவரது பணி திருப்தி அளிக்காததால், அவருக்கு பதிலாக, விஜய் ரூபானிக்கு முதல்வர் பதவி தரப்பட்டது. ரூபானி, தன் பணியை சிறப்பாக செய்தாலும், 'மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் வேகமாக நிறைவேற்றப்பட்டன; இப்போது அந்த அளவுக்கு இல்லை' என, பலரும் கூறி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் அப்படி கூறினாலும் பரவாயில்லை; பா.ஜ., வின் முக்கிய நிர்வாகிகளே, அப்படி கூறுவது தான், விஜய் ரூபானிக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தன்னையும் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதை காட்டுவதற்காக, பல புதிய வியூகங்களை வகுத்து வருகிறார். இதன்படி, மாதத்துக்கு ஒருமுறை, ஒவ்வொரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பிரதிநிதிகளை அழைத்து, அவர்களுடன் உணவு சாப்பிட்டபடியே கலந்துரையாடுகிறார்; அவர்களது குறைகளையும் கேட்டறிகிறார். இதேபோல், மாதம் தோறும், 10 இளைஞர்களை, தன் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுடன் தேநீர் அருந்தியபடியே, அன்றாட நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறார். இதைப் பார்த்த, பா.ஜ.,வினர், 'உணவு சாப்பிடுவது, தேநீர் சாப்பிடுவது போன்ற நடவடிக்கைகள் பலன் அளிக்குமா என்பது, தேர்தல் வந்தால் தான் தெரியும்' என்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X