சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கோடிகளை குவித்த ஐ.ஜி., ஆபீஸ் டிரைவர்!

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கோடிகளை குவித்த ஐ.ஜி., ஆபீஸ் டிரைவர்!''எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் நின்னதால, பணத்தை பெருசா செலவழிக்கலைங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில, தி.மு.க., துணை பொதுச் செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிட்டாங்கல்ல... இவங்களை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில, பா.ஜ.,


 டீ கடை பெஞ்ச்


கோடிகளை குவித்த ஐ.ஜி., ஆபீஸ் டிரைவர்!



''எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் நின்னதால, பணத்தை பெருசா செலவழிக்கலைங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில, தி.மு.க., துணை பொதுச் செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிட்டாங்கல்ல... இவங்களை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில, பா.ஜ., சார்புல, சரஸ்வதி போட்டியிட்டாங்க...

''பிரபலம் இல்லாத வேட்பாளருங்கிறதால, சுலபமா ஜெயிச்சிடலாம்னு நினைச்ச சுப்புலட்சுமி, பணத்தை பெருசா செலவழிக்கலை... பிரசாரத்துக்கு போனப்ப, கட்சி நிர்வாகிகளிடம், 'என்ன, செலவே பண்ண மாட்டேங்கிறீங்க... நாளைக்கு நான் ஜெயிச்சிட்டா, அது வேணும், இது வேணும்னு வந்து நிற்க மாட்டீங்களா'ன்னு சத்தம் போட்டிருக்காங்க...

''அது மட்டும் இல்லாம, அவரது கணவர் ஜெகதீசனும், நிர்வாகிகளை கடுமையா திட்டி வேலை வாங்கியிருக்காரு... 'இப்பவே இப்படின்னா, நாளைக்கு ஜெயிச்சிட்டா, இவங்களை கையிலயே பிடிக்க முடியாது'ன்னு நிர்வாகிகள் புலம்பிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பதவி உயர்வு பறிபோயிடுமோன்னு பயப்படறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''போலீஸ்ல, நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலர், டி.ஜி.பி., வரை பதவி வகித்து, 'ரிடையர்' ஆவா... அதேநேரம், டி.எஸ்.பி.,யா பணிக்கு வர்ற குரூப் 1 அதிகாரிகள், அதிகபட்சம் ஐ.ஜி., பதவியை எட்டி பிடிக்கறது அரிதா நடக்கும் ஓய்...

''அப்படியே, ஐ.ஜி., ஆனாலும், 'பவர்புல்'லான மணடல ஐ.ஜி., பதவியை பிடிக்க, படாத பாடு படுவா... இப்ப, அதுக்கும் ஆப்பு வைக்க போறதா பயப்படறா ஓய்...

''சமீபத்துல, தேர்தல் கமிஷன், தென்மண்டல ஐ.ஜி.,யா இருந்த முருகனை மாத்திட்டு, அங்க, கூடுதல் டி.ஜி.பி., ஆபாஷ்குமாரை நியமனம் செய்தது... அதே மாதிரி, ஐ.ஜி., அந்தஸ்துல கோவை கமிஷனர் சுமித் சரணை மாத்தி, கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமிச்சிடுத்து ஓய்...

''இதனால, இனி, மண்டல ஐ.ஜி., பதவிக்கு கூடுதல் டி.ஜி.பி.,யை தான் நியமிப்பான்னு ஒரு பேச்சு ஓடறது... இதனால, தங்களுக்கு அந்த பதவி கிடைக்காதோன்னு, குரூப் 1 அதிகாரிகள் பயப்படறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''என்கிட்டயும் ஒரு போலீஸ் சங்கதி இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.''சீக்கிரமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில், 10 வருஷமா டிரைவரா இருக்கிற ஒருத்தர், ஐ.ஜி., கட்டுப்பாட்டுல வர்ற மாவட்ட போலீஸ்ல செல்வாக்கா இருக்காரு...

''பல வருஷங்களா, ஒரே இடத்துல இருக்கிறதால, தான் வைத்தது தான் சட்டம்... தான் சொல்றதை தான் ஐ.ஜி.,க்கள் கேட்பாங்கன்னு ஒரு மாயையை உருவாக்கிட்டாரு வே...

''இதை பயன்படுத்தியே, போலீசார் டிரான்ஸ்பர் உள்ளிட்ட விஷயங்களை முடிச்சு குடுத்து, கோடிகள்ல சம்பாதிச்சிட்டாராம்... தி.மு.க., ஆதரவாளரான இவர், சமீபத்துல இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஜி., ஜெயராமன் பற்றி, எதிர்முகாமுக்கு பல தகவல்களை, 'பாஸ்' பண்ணியிருக்கார்னும் சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''போறச்சே, துரை ஆத்து வழியா போகலாம்... அவரை பார்த்து, ரொம்ப நாளாச்சு ஓய்...'' என்றபடியே, குப்பண்ணா எழ, மற்றவர்களும்
கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X