சேலம்:திருமணமான, 42 நாட்களிலேயே, மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், அவரது கழுத்தை அறுத்து கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம், வீராணம் அருகே, கோராத்துப்பட்டியைச் சேர்ந்தவர், தங்கராஜ், 24. 'கேபிள் டிவி' ஒயர் சரிபார்க்கும் ஊழியர். கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர், மோனிஷா, 19; தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்தார்.இருவருக்கும், பிப்., 24ல் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, இருவரும் இறந்து கிடந்தனர்.
வீராணம் போலீசார் கூறியதாவது:மோனிஷா, எப்போதும் மொபைல் போனில் பேசியபடி, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்'கில் தகவல் அனுப்பி வந்தார். இதை, தங்கராஜ் கண்டிக்க, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச், 24ல், மோனிஷாவின் அத்தை மகன், தனக்கு பிறந்த நாள் எனக்கூறி, சாக்லேட் கொடுத்தார். பதிலுக்கு, மோனிஷா, 'கேக்' வாங்கி கொடுத்துள்ளார்.
இதனால், மனைவி நடத்தையில் தங்கராஜ் சந்தேகப்பட, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, மீண்டும் தகராறு ஏற்பட, 'கேபிள் கட்' செய்யும் கத்தியால், மோனிஷாவின் கழுத்தை அறுத்து, தங்கராஜ் கொலை செய்தார்.தொடர்ந்து, 'கேபிள்' ஒயரால், அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரது மொபைல் போன்களையும் ஆய்வு செய்து வருகிறோம். வேறு காரணம் ஏதும் உள்ளதா என, விசாரணை முடிவில் தெரியவரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE