பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகம் :தர்மபுரி வேட்பாளர்கள் பீதி

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமானதால், தங்களுக்கு வெற்றி கிடைக்குமா என, பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள், பதற்றத்தில் காத்திருக்கின்றனர்.தமிழக சட்டசபை தேர்தல், நேற்று முன்தினம் முடிந்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில், 71 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், பிரதான கட்சிகளான, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமானதால், தங்களுக்கு வெற்றி கிடைக்குமா என, பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள், பதற்றத்தில் காத்திருக்கின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல், நேற்று முன்தினம் முடிந்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில், 71 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், பிரதான கட்சிகளான, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. தங்களது அரசியல் எதிர்காலம் வாழ்வா, சாவா என்பதால், பிரதான கட்சி வேட்பாளர்கள், ஓட்டுக்கு நோட்டு, பரிசு பொருட்களை, வாரி வழங்கினர்.

குறிப்பாக, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன், ஐந்தாவது முறையாக போட்டியிடும் பாலக்கோடு தொகுதியில், பண பட்டுவாடா கன ஜோராக நடந்தது. இதனால், தமிழக அளவில், பாலக்கோடு தொகுதியில் அதிகபட்சமாக, 87.33 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில், பென்னாகரத்தில், 84.26, பாப்பிரெட்டிப்பட்டியில், 82.10, தர்மபுரியில், 79.73, அரூரில், 78.59 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.கூடுதல் ஓட்டுப்பதிவு, தங்களுக்கு சாதகமா, பாதகமா என்பது தெரியாமல், பிரதான கட்சி வேட்பாளர்கள், ஓட்டு எண்ணும் நாளுக்காக, பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X