அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சியினர் விழிப்போடு பணியாற்ற வேண்டும்: பழனிசாமி - பன்னீர்செல்வம் வேண்டுகோள்

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை:'அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள், முகவர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணும் மையங்களை, சுழற்சி முறையில், 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அவர்கள் அறிக்கை:எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆசியோடு, ஜெ., அரசு
TN election 2021, AIADMK, ADMK, OPS, EPS, பன்னீர், பழனிசாமி, வேண்டுகோள்

சென்னை:'அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள், முகவர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணும் மையங்களை, சுழற்சி முறையில், 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்கள் அறிக்கை:எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆசியோடு, ஜெ., அரசு மக்கள் நலனை முன் வைத்து, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.அந்த வகையில், அ.தி.மு.க., அரசு தொடர வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, அராஜகத்தில், வன்முறையில் கைதேர்ந்த, தி.மு.க.,வினரின், பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, நேற்று முன்தினம் சுமூகமான ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தேர்தல் பணியாற்றிய, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.ஓட்டுப்பதிவு முடிந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மே, 2 அன்று ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. அதுவரை, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள், முகவர்கள், கவனக்குறைவாக இருக்கக் கூடாது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணும் மையங்களை, மிகுந்த எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன், சுழற்சி முறையில், 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்.இவ்வாறு, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஏப்-202115:07:19 IST Report Abuse
Pugazh V அதிமுக காரர்கள் விழிப்புணர்வு தான் தெரிகிறதே பைக்கில் அசால்ட்டாக வாக்கு இயந்திரங்களை தள்ளிகிட்டு போகப் பார்த்ததும் பொதுமக்கள் கண்டு கையும் களவுமாகப் பிடித்ததும் அனைவரும் பார்த்தோமல்லவா?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஏப்-202115:05:19 IST Report Abuse
Pugazh V அதிமுக வே இப்படி சொல்கிறதா? அவங்க கூட்டாளி மேல அவங்களுக்கே நம்பிக்கை இல்லியா? அடப்பாவமே.
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
08-ஏப்-202117:15:05 IST Report Abuse
Srinivasதிமுக சொல்லும்போது இவனுங்களும் சும்மா சொல்லிவைக்கணும்..இல்லன்னா எதிர்கட்சிக்கு இவனுங்க மேல சந்தேகம் வரும் அதனால சொல்லிவைப்போம்னு சொல்றானுங்க.......
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஏப்-202115:04:33 IST Report Abuse
Pugazh V தஞ்சை அன்பு சூப்பர் கருத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X