பொது செய்தி

இந்தியா

பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு திட்டம்!

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 07, 2021
Share
Advertisement
புது டில்லி: தடுப்பூசி இயக்கத்தை விரைவுப்படுத்தும் விதமாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பல்வேறு மாநில முதல்வர்களும் தடுப்பூசிக்கான வயது வரம்பைக் குறைக்குமாறு மத்திய அரசிடம்

புது டில்லி: தடுப்பூசி இயக்கத்தை விரைவுப்படுத்தும் விதமாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.



latest tamil news



கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பல்வேறு மாநில முதல்வர்களும் தடுப்பூசிக்கான வயது வரம்பைக் குறைக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்திய மருத்துவ சங்கமும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியது. அதில், தொற்றுநோயின் 2-வது அலை வேகமாக பரவுவதைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசி உத்திகளை போர்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் என கேட்டிருந்தது.


latest tamil news



இந்நிலையில் பணியிடங்களில் தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள 100 பயனாளிகளைக் கொண்ட அலுவலகங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே உள்ள கொரோனா தடுப்பூசி மையம் இதனை கவனிக்கும். இதுபோன்ற பணியிட தடுப்பூசி மையங்கள் ஏப்ரல் 11 முதல் தொடங்கப்படலாம் என சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறின.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X