2016 சட்டசபை தேர்தலை விட ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2016 சட்டசபை தேர்தலை விட ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு

Added : ஏப் 07, 2021
Share
சென்னை:தற்போது நடந்த தேர்தலில், 2016 சட்டசபை தேர்தலை விட, ஓட்டுப்பதிவு, 1.46 சதவீதம் குறைந்துள்ளது.தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிரான அதிருப்தி காரணமாக, 78.01 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.எதிர்க்கட்சியாக இருந்த, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அடுத்து, 2016 சட்டசபை தேர்தலில், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை இல்லாததால், 74.24 சதவீதம் ஓட்டுகள்பதிவாகின.அ.தி.மு.க., மீண்டும்
ஓட்டுப்பதிவு, சதவீதம், குறைவு

சென்னை:தற்போது நடந்த தேர்தலில், 2016 சட்டசபை தேர்தலை விட, ஓட்டுப்பதிவு, 1.46 சதவீதம் குறைந்துள்ளது.

தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிரான அதிருப்தி காரணமாக, 78.01 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.எதிர்க்கட்சியாக இருந்த, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அடுத்து, 2016 சட்டசபை தேர்தலில், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை இல்லாததால், 74.24 சதவீதம் ஓட்டுகள்பதிவாகின.அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.

இம்முறை, மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்புடன், அ.தி.மு.க., களம் இறங்கியது. 10 ஆண்டுகளாக, ஆட்சியில் இல்லாத நிலையில், இந்த தேர்தலில், எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன், தி.மு.க., களம் இறங்கியது.தொடர்ந்து, அ.தி.மு.க.,10 ஆண்டுகளாக, ஆட்சியில் இருப்பதால், மக்களிடம் அதிருப்தி உள்ளது.எனவே, ஓட்டுப்பதிவு அதிகம் இருக்கும் என, தி.மு.க., எதிர்பார்த்தது. ஆனால், 2016 சட்டசபை தேர்தலை விட, இந்த தேர்தலில், 1.46 சதவீதம் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது.

மக்களிடம் அதிருப்தி இருந்தாலும், ஓட்டுப்பதிவு குறைந்ததற்கு, கொரோனா நோய் பரவல் முக்கிய காரணம் என்று, கூறப்படுகிறது.எனவே, ஓட்டுப்பதிவை வைத்து, யார் வெற்றி பெறுவர் என்பதை, கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X