பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப் பெட்டிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணும் மையங்களில், மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகளில், நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 'சீல்' வைக்கப்பட்டு, போலீஸ்

சென்னை:தமிழகத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணும் மையங்களில், மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகளில், நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 'சீல்' வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, எடுத்துச் செல்லப்பட்டன.

மாநிலத்தில், 75 ஓட்டு எண்ணும் மையங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அறை உள்ளே மற்றும் வெளியே, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.அறைக்கு வெளியே, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக, கட்டடம் முழுதும், மாநில ஆயுதப்படை போலீசார்; கட்டடத்திற்கு வெளியே, மாநில போலீசார் என, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்களும், அங்கு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X